2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய சுகாதார அமைச்சர் கடமையை பொறுப்பேற்றார்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக், ஏ.எஸ்.எம்.யாசீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் கிராமிய, மின்சார அமைச்சராக  திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில்  இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மன்சூர் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து,  ஏற்பட்ட வெற்றிடத்துக்கு  ஏ.எல்.எம்.நஸிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் சுதாதார அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

44 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

47 minute ago - 0     - 4

மன்னிப்பு

49 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

52 minute ago - 0     - 2