Suganthini Ratnam / 2016 மார்ச் 07 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் தொலைந்துபோன அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 45 வயதுடைய ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி சித்திரவேல் உத்தரவிட்டார்.
அக்போபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, பொலிஸ் அடையாள அட்டை மற்றும் சாரதி அடையாள அட்டை ஆகியன கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரில் காணாமல் போயுள்ளன.
இந்த அட்டைகளை மீட்டு உரியவருக்கு வழங்காமல் மேற்படி நபர் தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago