Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியிலே மக்கள் மத்தியில் இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். இந்த நல்லிணக்கம் ஏற்பட்டு, நிலைத்திருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
காலை இலங்கை போக்குவரத்துச் சபையின் கிண்ணியா பஸ் சாலை மற்றும் பஸ் நிலையத்துக்;கான அடிக்கல்லை இன்று சனிக்கிழமை நாட்டி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால் மட்டும் போதாது, தனியார் மற்றும் அரச பஸ்களைச் செலுத்துபவர்களிடையே எவ்வித மோதல்களும் இடம் பெறாது இருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தளவில் கிழக்கு மாகாணம் மூன்று இனங்களும் சமமாக வாழ்கின்ற மாகாணமாகும். இந்த மாகாணத்தை கையாள்வது மிகக் கடினமானதொன்றாகும்.
கிண்ணியா சாலையில் 10 பஸ்கள் மாத்திரமே உள்ளன. எனினும் 25 நடத்துநர்கள் மற்றும் 19 சாரதிகள்; இருக்கின்றனர். இங்கு ஊழியர்களுக்கு வழங்கப் படுகின்ற சம்பளம் மக்களுடைய பணம் என்பதால் அது பயனள்ளதாக அமைய வேண்டும்.
இந்த கிண்ணியா பஸ் சாலை, தரமாக இயங்குவதற்கு என்னால் இயன்ற அளவு உதவிகளை வழங்குவேன் என்றார்.
கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபை மற்றும் கிண்ணியா பஸ் சாலை என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா- மகரூப், இம்ரான் மகரூப், துரைரட்ன சிங்கம், கிழக்கு மாகாண போக்குவரத்து வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், திருகோணமலை மாவட்ட திட்டமிடல் உதவிக் பணிப்பாளர் குகவதனி கிண்ணியா திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ.முஜீப், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago