2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மணல் அகழ்வுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மணல் அகழ்வின்போது, விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, கிண்ணியா - கங்கை கண்டகாடு பாலத்துக்கருகில் இருந்த ஆற்றுக்குள் குதித்து, நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரது குடும்பங்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர், நிதி அன்பளிப்புச் செய்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறிய  ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாயை வழங்கி வைத்தார்.

ஆளுநரின் இவ்விஜயத்தின்போது, கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர், கிண்ணியா பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில்  அங்கிருந்த பொதுமக்கள், மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தங்களது வாழ்வாதாரத் தொழில் எனவும் அதை சட்டரீதியாகச் செய்வதறகு அனுமதியைப் பெற்றுத் தருமாறு, ஆளுநரிடம்  கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர், இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம்  சாதக பாதகங்கள் பற்றிக் கலந்துரையாடி, சட்டம் ஒழுங்கு நடைமுறைகளையும் அனுசரித்து தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

மேற்படி சம்பவத்தின், கிண்ணியா - இடிமன் பகுதியைச் சேர்ந்த, 23 வயதான முஹம்மது ரபீக் பாரிஸ் என்பவரும் 18 வயதான முகம்மது பசீர் றமீஸ் ஆகிய இருவருமே, உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X