2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மணல் அகழ அனுமதி

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டத்தில், தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்கான அனுமதியை, நாளை (01)  மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில், 2018 டிசெம்பர்  31ஆம் திகதியிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருத்த இடைக்கால தடை உத்தரவை நீக்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.  

இந்தக் கலந்துரையாடலில், புவிச்சரிதவியல், அழவை மற்றும் சுரங்கங்கள் பணியகப் பணிப்பாளர் அசேல இத்தவெல, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் சுசந்த புஞ்சி நிலமே, அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .