அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, நடுவூற்று கங்கைப் பகுதிகளில், மூன்று உழவு இயந்திரங்கள், இரண்டு டிப்பர்களுடன் சந்தேகநபர்கள் ஐவர், இன்று (28) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
மணல் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏற்ற வேண்டிய இடத்தில் மணலை ஏற்றாது, தாங்கள் விரும்பிய இடத்தில் மணலை ஏற்றிய குற்றச்சாட்டின்பேரில், அனுமதிப்பத்திரத்தின் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்காக, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கிண்ணியா, தம்பலகாமம், கல்மெட்டியாவை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 22, 25, 40 வயதுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும், சந்தேகநபர்களை, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 minute ago
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
19 minute ago