Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, பூவரசந்தீவு பிரதேசத்தில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் இன்று விதிக்கப்பட்டது.
கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்திய போது நீதிபதி சரவணராஜாவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நான்கு டிப்பர் மண்ணும் அரசுடமையாக்கப்பட்டு டிப்பர் வாகனம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை சோதனைக்குட்படுத்திய போது, இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago