2025 மே 14, புதன்கிழமை

மதுபானங்களுடன் பெண் கைது

Editorial   / 2021 நவம்பர் 04 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதி வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவரை, சம்பூர் பொலிஸார் நேற்று (03) இரவு அவரின் வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

இதன்போது, 66 பியர் போத்தல்கள், 49 பியர் டின் மற்றும் 11 சீல் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதபோதே, சட்டவிரோத மதுபானங்களுடன் குறித்த வீட்டில் இருந்த பெண்ணைக் கைது செய்தாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். .

கைது செய்யப்பட்ட பெண், சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றில் இவரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X