2025 மே 05, திங்கட்கிழமை

மதுபானம் அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் மயங்கிக் கிடந்த 7 வயதுச் சிறுவனை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (29) அனுமதித்த போது, சிறுவனுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டிருந்ததென, வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது.

சிறுவனுக்கு மதுபானம் வழங்கியது யார் என விசாரணைகளை மேற்கொண்ட போது, தந்தை வாங்கி வந்த குளிர்பானப் போத்தலில் சாராயம் கலக்கப்பட்டு, குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த மதுபானத்தை, மதுபானம் என நினைத்து, திருட்டுத்தனமாகக் குடித்த சிறுவனே, மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X