2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மதுபோதையில் மனைவியை பொல்லால் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை, பொல்லால் தாக்கி காயப்படுத்திய நபரொருவரை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.றிஸ்வான், நேற்று திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார். 

சேனையூர், சீதனவெளிப் பகுதியைச் சேர்ந்த பொன்னையா வேலாயுதம் (வயது 51) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர், மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற வேளை, உணவு சமைத்து வைக்கவில்லை என்ற காரணத்தினால் பொல்லால் மனைவியைத் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

சந்தேகநபரை, சம்பூர் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்து, நேற்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 
மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .