2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (20) இரவு  கைதுசெய்யப்பட்ட 02 பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவர்களில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய சாரதியை செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு 7,500 ரூபாய்  தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இரத்துச் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .