2023 மார்ச் 30, வியாழக்கிழமை

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Freelancer   / 2023 மார்ச் 17 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக  திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், திருகோணமலை மாவட்டத்துக்கான கடற்படை  பிரதிக் கட்டளைத்தளபதி மஹேஷ் டி சில்வாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்று (16) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உதவித் தவிசாளர்  ஏ.எல்.எம்.நெளபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம், வெள்ளைமணல் மீனவர் கூட்டுறவுச்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .