Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 17 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எம். எஸ். அப்துல் ஹலீம், வடமலை ராஜ்குமார், தீஷான் அஹமட்
'கிறிஸ்துப் பிறப்பு அன்பின் ஆரம்பம்” எனும் தொனிப்பொருளில், 2017ஆம் ஆண்டுக்கான அரச நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகளின் பிரதான வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருகோணமலையில் நேற்று (16) நடைபெற்றது.
அன்பு, பாசம், கருணை ஆகிய பண்புகளை நத்தார் தினம் வெளிக்காட்டுகின்றது. மனிதாபிமானத்தின் ஒளி விளக்கு நத்தாருடன் ஆரம்பமாவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது சிறப்புக்குரியதாகும்.
“எம்மதமாயினும் கருமங்களை செய்யும் போது, ஏழை மக்களைக் கருத்திற்கொண்டு செயற்படுவது இன்றியமையாதது. ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது முக்கியமான விடயமாகும்.
“எமது நாட்டை பொறுத்தவரை மத சகவாழ்வு வேண்டத்தக்க ஒன்றாகும். அதற்கு சகல மதங்களின் ஒத்துழைப்பும் தேவை. ஏழ்மை நிலை ஏற்படும் போது சமாதானம் நிம்மதியை உள்ளங்களில் ஏற்படுத்த முடியாது. சந்தோசம் சமாதானம் இருந்தால் மாத்திரமே, நிம்மதியாக வாழ முடியும்.
“யுத்தம் மீள ஏற்படுவதை நாம் அனைவரும் தடுத்தல் வேண்டும். சகல மதங்களின் தலைவைர்களும் இவ்விடயத்தில் பாரிய பொறுப்புடன் செயற்படல் வேண்டும்” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய ஆயர்கள், அருட்தந்தையர்கள், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்த்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகம, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்த்தவ சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, அரச உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
1 hours ago
2 hours ago