Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 10 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எழுத்தாற்றல் மூலம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்த பன்முக சமூக ஆய்வு எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா புதன்கிழமை (10) காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும்.
கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் சிகிச்சை பயனின்றி மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா “மரணம் ஒரு முடிவல்ல, ஒரு நாளில் வாழ்வு, இந்தியாவே நீயுமா, போரும் மனிதனும், எனது தேசம் எனது மக்கள், ஹலால் அடக்கு முறைக்கு எதிரானது உள்ளிட்ட 27 நூல்களை எழுதியுள்ளதோடு அவற்றில் 25 நூல்களை வெளியிட்டு வைத்துள்ளார்.
இவற்றில் குறுநாவல், சமூகநாவல் மற்றும் கட்டுரை நூல்கள் உள்ளடங்குகின்றன.
இவருடைய சேகுவேரா எனும் முதலாவது நூல் 1979ஆம் ஆண்டு வ.அ. இராசரத்தினம் தலைமையில் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தனது இலட்சியம் 1000 நூல்களை எழுதி வெளியிட வேண்டும” என்பதாகும் என அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி காலை எட்டு மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் நூலகத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக உணவு, குடிநீர், ஓய்வு இன்றி தொடர்ச்சியாக 12 மணி நேரம் அவர் எழுதியிருந்தார்.
முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் தலைப்பிலும் அடுத்து 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் கரன்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் அது அமைந்திருந்தது.
'உலகில் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும்போதும் இலக்கித்துறை சார்ந்த கின்னஸ் சாதனைகள் பெருமளவில் நிகழ்த்தப்படாத நிலையில், இந்த துறையில் சாதனையை நிகழ்த்தி திருகோணமலை மாவட்டத்துக்கு கிழக்கு மாகாணத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளேன்” என்று அப்போது அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்திருந்தார்.
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவரான அனிஸ்டஸ் ஜெயராஜாவுக்கு மூன்று ஆண் மக்கள் உள்ளனர்.
காலஞ்சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட் ஆகியோரின் மக்கள் தொடர்பு அலுவலராகவும் அவர் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago