Princiya Dixci / 2021 மே 13 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மற்றுமொரு கொரோனா மரணம், நேற்று (12) மாலை பதிவாகியது.
இலங்கை மின்சார சபையில் சாரதியாகப் பணிபுரிந்த 37 வயதுடைய ஆணொருவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமானார்.
இந்த மரணத்தோடு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா மரணம் 2ஆக அதிகரித்துள்ளது.
மரணமடைந்த இருவரும் 40 வயதுக்கு குறைந்த ஆண் குடும்பஸ்தர்கள் ஆவர்.
இதேவேளை, கொரோனாவின் 3வது அலையில் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025