Princiya Dixci / 2021 ஜூலை 13 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மலசலகூட வசதிகளற்ற 57 ஏழைக் குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்துக் கொள்வதற்கு, மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து நேற்று (12) நிதியுதவி வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரள இந்த நிதியுதவியை வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் சுகாதார வசதி இல்லாத, மலசலகூட வசதிகள் அற்ற 57 ஏழைக் குடுபங்களுக்கு, இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மலசலகூடம் கட்டுவதற்கு தலா 70,000 ரூபாய் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷனா பாண்டிகோரள மற்றும் முதூர் பிரதே பதில் செயலாளர் கே.குணநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
9 hours ago
9 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
02 Feb 2026