Niroshini / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களமும் கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 'கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம்' எனும் தொனிப்பொருளிலான மலரும் கிழக்கு கைத்தொழில் இலவசக் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்(07) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்; நஸீர் அகமட் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பார்.
இதன்போது,மரவேலை, வனைதல், துணிவர்ணமிடல், நெசவு, கடைச்சல், மோட்டார் திருத்தம், நிறமூட்டல், தும்பு கைத்தொழில், வாழைநார் உற்பத்தி போன்ற 17 காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்படுத்தப்படள்ளன.
இதில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்ட பயிலுநர்களின் வினைத்திறன்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago