2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மார்ச் மாதம் முதல் சுருக்கு வலைக்கு அனுமதிப்பத்திரம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம், மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படுமென, மீன்பிடி மற்றும் நீரியல்வளதுறை அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட எம்.பி இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில், மீனவச் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில், மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில், நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுருக்கு வலை பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரம் ஒவ்வொரு வருடமும் திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்களத்தால் வழங்கப்பட்ட போதும் இந்த வருடத்துக்கான அனுமதிப் பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லையென, மீனவச் சங்கப் பிரதிநிதிகள், அமைச்சரின் கவனத்துக்கு இதன்போது கொண்டுவந்தனர்.

இவர்களின் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக அனுமதிப் பத்திரத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளை அறிவுறுத்தியதோடு, அனுமதிப்பத்திரம், மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படுமென உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .