அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சுகாதார சேவைக்கான வருடாந்த இடமாற்றம், எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.
2018 ஜனவரி மாதம் 01ஆம் திகதி வருடாந்த இடமாற்றம் நடைபெறவிருந்த நிலையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதனடிப்படையில், தேர்தல் ஆணையாளரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில், பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரைக்கும் இவ்விடமாற்றம் பிற்போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்ற வைத்தியசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும், மார்ச் மாதம் 01ஆம் திகதி கடமையைப் பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இடமாற்றம் பற்றிய மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள www.ep.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago