Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனாவால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர, சடலங்களை அடக்கம் செய்வதற்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
“நாட்டில் சகல பாகங்களிலும் கொரோனாவால் மரணமடைவோரின் உடல்கள் இன, மத பேதமின்றி ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
“வைத்தியர்களின் அறிக்கைப்படி அடுத்து வரும் வாரங்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் போது, ஓட்டமாவடியில் அடக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி போதாமல் போகலாம்.
“எனவே, தற்போதே மாற்று இடங்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால், இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
“இறக்காமம், புத்தளம், மன்னார் மற்றும் கிண்ணியா போன்ற பிரதேசங்களில் மாற்று இடங்கள் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொருத்தமானவற்றை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago