2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்வேலி அமைக்கும் பணி ஆரம்பம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை-மொறவெவ பிரதேச வைத்தியசாலையின் யானை மின் வேலி அமைக்கும் பணிகள், நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியதிகாரி போல் ரொஷான் தெரிவித்தார்.

ஹொரவ்பொத்தானை - திருகோணமலை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகனின் அறிவுறுத்தலின் பேரில் திறந்துவைக்கப்பட்டது.

மொறவெவ பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நாள் முதல் மூன்று தடவைகள் யானைகளின் தாக்குதலினால் சேதமடைந்த நிலையில், வைத்தியசாலையை புனரமைத்துத் தருமாறும் யானை மின் வேலியை அமைத்துத் தருமாறும் மக்கள் வீதியை மறைத்து பல தடவைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, யானை மின் வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சரினால் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிரமதானப்பணியில் கலந்துகொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .