2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீன்பிடி படகுக்கு தீ வைப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில்   செவ்வாய்கிழமை (01) அதிகாலை மீன்பிடி பட ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது என ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மீன்பிடி படகே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் மூலம் படகின் உரிமையாளர் பல லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .