Janu / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ம் கட்டை பகுதியில் புதன்கிழமை (30) காலை மீன் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி நிலாவெளி பிரதேசத்திலிருந்து கந்தளாயிக்கு மீன் ஏற்றி வந்த போது 87 ஆம் கட்டைப் பகுதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாகவும், இவ்விபத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த வாகன சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எப்.முபாரக்


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago