Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா, பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட அனைத்து கிராம அபிவிருத்தி சங்கங்களையும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களையும், 2019ஆம் ஆண்டுக்கு மீள்பதிவுக்காக விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, கிண்ணியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர் எம்.ஏ.முகம்மது நாஸர் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அல்லது கிண்ணியா பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கலாமெனவும் காலதாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் கடிதம் மூலம் மீள் பதிவுக்காக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர், மேலும் தெரிவித்தார்.
37 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
55 minute ago