2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

மூதூரில் காணி அளவிடும் பணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி, நில அளவையாளர்கள் இன்று (18) மாலை அளவீடு செய்ய முற்பட்டபோது, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் குட்டியாராம விகாரை மலை உச்சியில் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி மக்களுடைய காணிகள் இருப்பதாகவும் விகாரைக்கு 300 ஏக்கர் காணி தேவைப்படுவதாகக் கூறி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது, குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள மலைப்பகுதியை அளவீடு செய்வதற்கு தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தி இருந்தபோதிலும், தாம் குடியிருந்து வரும் காணிகளையும் சுற்றி அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும் இதனால் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு அளவீடு செய்ய வருகை தந்த நில அளவையாளர்கள் மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X