2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மூதூரில் கொரோனா மரணம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை – மூதூர், அக்கரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபரொருவர், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.

எனினும், உயிரிழந்தவரின் உறவினர்கள் 11 பேருக்கு மேகொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் சடலம், மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X