2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மூதூரில் புகை விசிறும் நடவடிக்கை

எப். முபாரக்   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், டெங்கு பரவும் இடங்களில், புகை விசிரும் நடவடிக்கைகள், இன்று (17)  முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மூதூர் பிரதேசத்துக்கு நாளையும் (18) நாளை மறுதினமும் (19)  விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொதுச் சுகாதார பகுதியினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நுளம்புகளால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் வீதம் அதிகரித்துள்ளமையின் காரணமாக, மூதூர் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு, மூதுார் சுகாதார  வைத்திய அதிகாரிகள், பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .