Princiya Dixci / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்கமம் பகுதியில் வாய்க்காலுக்கு அருகில் இருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் நேற்று (15) கண்டெடுக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தக் கிளைமோர்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இரு கிளைமோர் குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்காக மூதூர் நீதிமன்றம், பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, திருகோணமலை தலைமையக விசேட அதிரடிப்படையின் கிளைமோர் குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
2 hours ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago