2025 மே 01, வியாழக்கிழமை

மூதூர் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி திறந்துவைப்பு

தீஷான் அஹமட்   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்றிட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் மத்திய கல்லூரியில் 50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆண்கள் விடுதித் திறப்புவிழா, கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.பஷீர் தலைமையில் இன்று (09) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக தௌபீக் எம்.பி கலந்துகொண்டு இக்கட்டடத்தைத் திறந்துவைத்தார்.

ஏனைய அதிதிகளாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஏம்.ஹரீஸ், பீ.டி.பைஸர், மூதூர் வலயகக் கல்வி அலுவலகப் பிரதிக் கல்விப்  பணிப்பாளர் எம்.எம்.அப்பாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .