2025 மே 14, புதன்கிழமை

மூதூர் மாணவர்களுக்கு விரைவில் விடுதி

எப். முபாரக்   / 2017 ஜூலை 08 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட மூதூர் பிராந்தியத்தில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கான மாணவர் விடுதி (Boys Hostel) அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஸ்.தௌபிக் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டா நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக  கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை கல்வி அமைச்சில் நேற்று (07) நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடி, பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு விடுதியின் தேவைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்துள்ளார்.

இதன் தேவையை உணர்ந்த கல்வியமைச்சர்,  2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் சுமார் 4 கோடி 76 இலச்சம் ஒதுக்கீட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

அதேவேளை, இவ்வேலைத்திட்டம் உரிய முறைப்படி நடைமுறைப்படுத்தவும் செயற்படுத்தவும் கிழக்கு மாகாண பாடசாலை வேலைகளுக்கான பணிப்பாளர் கேள்வி அறிவித்தல் கோரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச் செயற்றிட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவும் பாடசாலை புறக்கீர்த்தி செயற்பாடுகளை உரிய காலத்தில் நிறைவேற்றவும், மேலதிக நேரத்தை கற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் நல்லதொரு சூழல் இதன்மூலம் உருவாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .