2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மூத்த எமுத்தாளர் தர்மராஜா காலமானார்

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலையைச் சேர்ந்த மூத்த எமுத்தாளரும் முன்னணி இலக்கியச் செயற்பாட்டாளருமான டொக்டர் இராஜ. தர்மராஜா (69 வயது) மாரடைப்புக் காரணமாக, கொழும்பில் வைத்து நேற்று (12) காலமானார்.

அன்னாரது சடலம், கொழும்பு, கல்கிசையிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (14) மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளனவென, உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

1970களில் எழுத்துலகில் பிரவேசித்த இவரது சிறுகதைத்தொகுதியான “மனக்கோடுகள்” 2013இல் வெளியானது.

இவர் இலங்கை, இந்திய எழுத்தாளர்களுடனும் அமைப்புகளுடனும் மிக நெருங்கிய தொடர்புகொண்டு, பல இலக்கியச் செயற்பாடுகளை திருகோணமலையில் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X