Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ.சுதாகரன்
துறைநீலாவணை மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தை, மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் மய்யத்தின் தலைவர் க.ஜெகதீஸ்வரன் தலைமையில், துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை (19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
துறைநீலாவணை புலம்பெயர் உறவுகளின் அவுஸ்ரேலியா ரீ.என் அமைப்பின் பங்களிப்புடன், துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் மய்யம், துறைநீலாவணை மகா வித்தியாலய கல்விச் சமூக ஒத்துழைப்புடன் இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சி.வில்வரெத்தினம், கிழக்கு மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன், ஓய்வு நிலை நீர்ப்பாசன பணிப்பாளர் எம்.துரைசிங்கம், பொறியியலாளரும் ஒருங்கிணைப்பாளருமான க.கனகரெட்ணம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
34 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago