2025 மே 16, வெள்ளிக்கிழமை

மெக்ஷெய்ஷர் மைதானத்தை சூழவுள்ள வடிகான்களை புனரமைக்க அனுமதி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மெக்ஷெய்ஷர் விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள வடிகான்களை புனரமைப்பதற்கு திருகோணமலை நீதவான்  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

13.2.2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.  

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே, நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

மெக்ஷெய்ர் விளையாட்டு மைதானத்தில்  சர்வதேச விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளமையாலும் மக்களின் நலன் கருதியும் இந்த மைதானத்தைப் புனரமைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வடிகான் தொகுதி அமைந்துள்ள இடமும் புதைகுழி காணப்படும் இடமும் வேறாகக் காணப்படுகின்றது.  மீண்டும் புதைகுழி தோண்டும்  நடவடிக்கையை ஆரம்பித்தாலும், வடிகான் தொகுதி வேலையை முன்னெடுப்பதால் பாதிப்பு ஏற்படாது என்றும் நீதவான் கூறினார்.

இந்த மைதானத்தை சர்வதேச மைதானமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கை 2014ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இம்மைதானத்தில் கிணறு வெட்டியபோது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரிடம் புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான  விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், இதன் அறிக்கையை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனை அடுத்து, இம்மைதானத்தில் புனரமைப்புப் பணியை நிறுத்துமாறு  திருகோணமலை நீதவான் நீதிமன்றம்; உத்தரவிட்டிருந்தது.

இதன் பின்னர், இம்மைதானத்தில்  புதைகுழி  தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது,  பல எலும்புக்கூட்டு பாகங்கள் மீட்கப்பட்டு, அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .