Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 05 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா, அண்ணல் நகர் வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நான்கு வயதுச் சிறுவனொருவன், கண்டி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா தள வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கிண்ணியா, பூவரசந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் பெற்றோர், நோன்பு பெருநாளுக்கு புத்தாடை வாங்குவதற்காக கிண்ணியா, அண்ணல் நகரிலுள்ள கடைக்கு அச்சிறுவனைக் கூட்டிச் சென்றுள்ளனர்.
அந்த கடையில் புத்தடையை வாங்கிவிட்டு, வெளியே வரும் போது குறித்த சிறுவன் தனது பெற்றோரை முந்திவந்து வீதியின் மறு பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறுவதற்கு வீதியைக் கடக்க முற்பட்ட போது, அந்த வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் கிண்ணியா தள வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
மோட்டார் சைக்கிள் ஓடிவந்த இளைஞன் கிண்ணியா பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago