Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இந்நாட்டில் மீண்டும் ஓர் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாக்கப்படுவதோடு, முஸ்லிம் சமூகம் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கான பாதுகாப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார்.
திருகோணமலை, முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா மகா வித்தியாலத்தில் தையல் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) முன்னால் கிண்ணியா நகர சபையின் தலைவர் சட்டத்தரணி ஹில்மி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்று சிறைச்சாலைகளில் முஸ்லிம் சமூகம் 22 சதவீதமானோர் இருக்கின்ற நிலையில், பத்து சதவீதமானோர் கல்வியைக் கற்று சிறந்த நிலையில் இருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் கல்வி மட்டம் போதாது சிறப்பாக கற்க வேண்டும்.
அனைத்து துறைகளும் வளமடைய வேண்டும். இஸ்லாத்தின் வக்பு சட்டம்,காணிச்சட்டம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான எல்லா விடயங்களும் சிறப்பாக அமைய வேண்டும்.
அதேபோன்று தான் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகின்றது.
எமது கட்சியின் வளர்ச்சி மக்களின் பேராதரவினால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தினை வளப்படுத்துவதற்கான தனியான துறைகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு வளர்ச்சியடைவதற்கு எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் மக்கள் பிரதி நிதிகளின் செல்வாக்கள் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
3 hours ago