2025 மே 16, வெள்ளிக்கிழமை

மூதூர் போராட்டம் முடிவுக்கு வந்தது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கோரி, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்னால் கடந்த 2 நாட்களாக ​முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் ஆர்ப்பாட்டம், நேற்று மாலை கைவிடப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தி/ அல்-ஹிலால் மத்திய கல்லூரி பழைய மாணவர்களும் மூதூரில் பிரதேசத்தில் உள்ள 28 சமூக அமைப்புக்களைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

அல்ஹிலால் மத்திய கல்லூரியை நேற்றையதினம் மூடி, பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்க்கு எதிராக, ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .