Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில் ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தில் எந்தவித வேதனமுமின்றி கடமையாற்றுகின்ற 3,537 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகக் குறைந்தது 3,000 ரூபாய் மாதாந்தம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை (30) நடைபெற்றபோது, அதில்; எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, முதலமைச்சரின்; கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்தை கல்விக் கல்லூரித் தரத்துக்கு உயர்த்துதல், சம்பூர் நாவலடியிலிருந்து கடற்படை முகாம் வாயில்வரை 2.6 கிலோமீற்றர் தூரமுள்ள வீதியை கார்ப்பெட் வீதியாக புனரமைத்தல், கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள், தாதிகள், வெளிநோயாளர்களுக்கான விடுதிகளை அமைத்தல்.
மேலும், 2016ஆம் ஆண்டு வரவு –செலவுத்திட்டத்தில் 969 மில்லியன் ரூபாய் விசேட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி 4,232 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விகிதாசார அடிப்படையை கருத்திற்கொண்டு வேலையற்ற 355 பட்டதாரிகளை உடனடியாக ஆசிரியப் பணியில் அமர்த்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு கல்வியமைச்சின் செயலாளரை கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் கேட்டுள்ளப்படவுள்ளது. இவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago