2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மூன்றரைக் கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, பொன்ஆனந்தம்

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில், மூன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இன்று (09) அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், அந்நபர், யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த மயில்வாகனன் சஜீவன் (32வயது) எனவும் தெரிவித்தனர்.

கேரளா கஞ்சாவை முச்சக்கரவண்டியில் கொண்டு வருவதாக, அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சோதனைகளை மேற்கொண்ட போது, முச்சக்கரவண்டியில் வந்த நபர், இறங்கி நடந்து சென்றுள்ளார்.

நடந்து சென்ற நபர் தொடர்பில், சந்தேகம் கொண்ட அதிரடிப்படையினர், அவரைச் சோதனை செய்த போது, அவரிடமிருந்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .