2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூன்று நாட்களின் பின்னர் முற்றுப் பெற்றது உண்ணாவிரதம்

Thipaan   / 2016 ஜூன் 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவெலி கம நவோதய வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, அப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்றுப் புதன்கிழமை (29) இரவு 8 மணியளவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.15 மணியளவல், உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் ஆகியோர், பெற்றோருடன் கலந்துரையாடி, எதிர்வரும் திங்கட்கிழமை, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்ததையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

நேற்றுப் புதன்கிழமை (29), மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இடம்பெற்று வந்தநிலையில், 36, 42 வயதுகளையுடைய பெண்கள் இருவர், மயக்கமடைந்து, சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், உக்கிரமடைந்த உண்ணாவிரதப் போராட்டம், வீதி மறியல் போராட்டமாக உருவெடுத்ததையடுத்து, சேருநுவர ஊடாக செல்கின்ற கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை வாகனங்கள் அனைத்தும், தோப்பூர் ஊடாக அனுப்பப்பட்டன.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் ஆகியோர் வாக்குறுதியளித்தையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.

மகாவெலி கம நவோதய வித்தியாலயத்தில் 443 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் நிலையில், இவ்வித்தியாலயத்துக்கு 28 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோதிலும், 20 ஆசிரியர்களே உள்ளனர்.  இன்னும் 08 ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரியே சேருநுவர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக கடந்த திங்கட்கிழமையிலிருந்து (27) பெற்றோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X