2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

மாற்றுத்திறனாளிகளையும்  அவர்களின்  குடும்பங்களையும் வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளான பயனாளிகள் 11 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன், சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பும் (பெடோ) இளம்தளிர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு,இறக்கக்கண்டி அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நேற்று (20) இடம்பெற்றது.

பெடோ நிறுவனத்தின்  தலைவர் எம்.பி.நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ. செனவிரத்ன, முஸ்லிம் எய்ட் திட்டமிடல் பணிப்பாளர் டி .அப்துல்சலீம், பிராந்திய இணைப்பாளர் எம் மஹ்ரூப் குச்சவெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர் . நிஜாம்தீன்  மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்  ரவூபிக் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1,500 குடும்பங்கள் செறிந்து வாழும்  இறக்கக்கண்டியில் ஒரு நிரந்தர வைத்தியசாலையோ,  மருந்தகமோ கிடையாது.  எனினும், இக்கிராமத்தில் வாழும் ஜெ .அமீன்டீன், 30 வருட சித்த யுனானி விஷக்கடி ஆயுள்வேத வைத்தியத்தில் அனுபவமுள்ள  மாற்றுத்திறனாளியாவார்.

இவருடைய தொழில் சேவையை மேம்படுத்தி,  வலுவூட்;டுவதற்காக, முஸ்லிம் எயிட் அனுசரணை  உதவிகள் வழங்கி மருந்தகம் மீளத்திறக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின்  விஷமில்லா  உணவு தயாரிக்கும்  கொள்கைக்கமைவாக, நாட்டுக்கோழி  வளர்ப்பதற்காக, கூடுகளுடன் 120 நாட்டுக்கு கோழிகள் மூவருக்கு  வழங்கப்பட்டுள்ளன.

தையல் இயந்;திரம்,மீன்பிடி வள்ளம், பாடசாலை  மாணவர்களுக்கான சைக்கிள், விளையாட்டுப் பொருட்கள், தையல் தொழில் செய்பவருக்கான  உபகரணம், இடியப்பம் செய்யும் உபகரணம், மூன்று சக்கரக்கதிரைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .