Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - ஹபரனை வீதியின் ஹபரனை பகுதியில் யானைக் குட்டியை துன்புறுத்திய சாரதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எடுக்கப்பட்ட TikTok காணொளியில் ஜீப் வண்டி ஒன்றின் சாரதி வீதியில் சென்ற யானைக்குட்டி ஒன்றை நெருங்கி செல்வதையும், அதை குறுக்கிட்டு விரட்ட முயற்சிப்பதுமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதையடுத்து, மின்னேரிய தேசிய பூங்காவின் பாதுகாவலர் உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் 200,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago