2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுகாடு வயல் பகுதியில் வைத்து விவசாயி ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேம்காமம் கிளிவெட்டியைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையான பத்தக்குட்டி கனகரெத்தினம் (54) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வயல் காவலில் நின்று கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு வந்த யானை, அவரைக் காலாலும் தும்பிக்கையாலும் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதன்போது உயிருக்குப் போராடிய குறித்த நபர் சப்தமிட்டு, அருகிலுள்ள வயலில் காவலில் ஈடுபட்டோரை அழைத்த போது, அவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும், யானையின் சீற்றத்துக்கு அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் போனமையால் மேற்படி விவசாயி, சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

விவசாயின் சடலத்தை, திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X