2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் மரணம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் தீஷான் அஹமட், எப்.முபாரக்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில்  இன்று (27) அதிகாலை 05 மணியளவில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர, ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (77 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே, மேற்படி நபரை யானை தாக்கியதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X