Freelancer / 2023 மே 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர், இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வான்எல பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய டபிள்யூ. பஸ்நாயக்க எனும் விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
வயலுக்கு சைக்கிளில் சென்றபோது வான் எல பிரதான வீதியில் மறைந்திருந்த காட்டு யானை, விவசாயியை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
யானையின் தாக்குதலுக்குள்ளான நபரை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (N)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago