2026 மார்ச் 19, வியாழக்கிழமை

யுவதியைத் தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதியைத்  தாக்கிய தந்தையை, இம்மாதம் 09ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

விஜித்தபுர, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபரின் மகள், இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக அறிந்ததையடுத்து, மகளை மூர்க்கத்தனமாகத் தாக்கியதாகவும் இவ்விடயம் தொடர்பாக  அவசர தொலைபேசியூடாகக் கிடைத்த தகவலையடுத்து, தந்தையைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .