Princiya Dixci / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்எம்.யாசீம்
திருகோணமலை, மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை 01 மணியளவில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய நிலங்களை குத்தகைக்குக் கொடுத்து தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் கணவனை இழந்த பெண்ணின் வீடே இவ்வாறு யானைகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது வீட்டுத்தோட்டங்களில் தென்னங்கன்றுகள், மரக்கறிகள் பயிர் செய்து வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் காலகட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago