Freelancer / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை- 4ஆம் கட்டைப் பகுதியில், நேற்றிரவு (25) ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை-கண்டி வீதி 05ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ்.எச்.பிரசன்ன பிரதீப் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதியதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்குச் சீனி வியாதி, சிறுநீரக நோய் போன்ற நோய்கள் காணப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், அவர் ரயிலில் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)
27 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
52 minute ago