2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ரயில் கடவையில் விபத்து; பொலிஸ் அதிகாரி மரணம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் ரயில் கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த  கார் மோதி விபத்துக்குள்ளானதில்  பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதோடு, காரின் சாரதியும்  பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர்  படுகாயங்களுடன், கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (11) 11 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில், மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன (55 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார் ரயில் கடவையை கடக்க முற்பட்ட  போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதெனவும், கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X