2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

Editorial   / 2021 நவம்பர் 08 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிப்பொத்தானையை சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பஸ்தரான ஹமீட் முபீட் என்பவரே, நேற்று (07) மாலை கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயில் மோதி பலியாகியுள்ளார்.

காதில் ஹெட்செட் அணிந்த நிலையில்,  கையடக்கத் தொலைபேசியுடன் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த போது, ரயில் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

குடும்பஸ்தரின் சடலம், கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X