2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ரூ.49 இல. பண மோசடி; முகாமையாளருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை பகுதியில், 49 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் முகாமையாளரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

திருகோணமலை, செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலத்திரனியல் நிறுவனம் ஒன்றின், திருகோணமலைக் கிளை முகாமையாளரான குறித்த சந்தேகநபர், அந்நிறுவனத்தில் மடிக் கணினிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, 49 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கெதிராக, குறித்த நிறுவனம் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .